சத்திஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டடத்தின் ஜெரபள்ளி (Jerapalli) கிராமம் அருகேயுள்ள வனப்பகுதியில் சி.ஆர்.பி.எஃப். துணை ராணுவ பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்கள், கோப்ரா (CoBRA- Commando Battalion for Resolute Action) படைப் பிரிவினர் ஆகியோர் இணைந்து மாவோயிஸ்டுகளை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படை வீரர்களும் இதற்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதையடுத்து மாவோயிஸ்டுகள் ஓடி மறைந்துவிட்டனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எஃப். படை வீரா் கம்தா பிரசாத் (Kamta Prasad) பலத்த காயமுற்று உயிருக்குப் போராடினார்.
அவரை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் வீரமரணத்தை தழுவினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தந்தேவாடா மாவட்டத்தில் (Dantewada district) நடந்த என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புலிகள் காப்பகத்தில் நக்சல் நடமாட்டமா? வனத்துறை தேடுதல் வேட்டை!