ETV Bharat / bharat

தலைமை தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - வேட்பாளர்களின் குற்றப் பிண்ணனி

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அலுவலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடுத்துள்ளார்.

'Criminal candidates': Contempt plea in SC against CEC, political leaders

author img

By

Published : Nov 9, 2020, 1:32 PM IST

டெல்லி: நடைபெற்றுவரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் தங்களது குற்றப் பிண்ணனியை முறையாகத் தெரிவிக்கவில்லை என டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரஜேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதில், வேட்பாளர்களின் குற்றப் பிண்ணனியை முறைவர வெளியிட முற்படாத தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக உறுப்பினருமான அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பிண்ணனியை மக்களுக்குத் தெரிவித்தவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்றப் பிண்ணனியினை வேட்பு மனு தாக்கல் செய்த முதல் இரண்டு வாரத்திற்குள்ளோ, அல்லது தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னரோ உள்ளூர் பத்திரிகைகள், தொலைகாட்சிகளில் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

ஆனால், தற்போது பிகாரில் நடைபெற்றுவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 353 வேட்பாளர்களில் 164 வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிக வேட்பாளர்களை முன்நிறுத்தியுள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் தங்களது வேட்பாளர்கள் குறித்த தகவல்களை முறையாக வெளியிடவில்லை. வெளியிடப்பட்ட தகவல்களும் ஒரேயொரு இந்தி நாளிதழில் மட்டுமே வெளியிடப்பட்டது என வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை முறையாகக் கையாளாத தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சிகள் மீது அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றாததற்காக அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அமெரிக்க மக்கள் தங்கள் தவறை திருத்திவிட்டனர்... இந்திய மக்கள்?- சிவசேனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.