ETV Bharat / bharat

நாட்டில் பட்டியலின, பழங்குடியினர் மீதான குற்றங்கள் அதிகரிப்பு!

நாட்டில் பட்டியலினத்தினர் மற்றும் பழங்குடியினர் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

Crime against Scheduled Castes  Scheduled Tribe  Scheduled Castes  Rape cases  பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள்  பழங்குடியினர்  பாலியல் வன்புணர்வு வழக்குகள்

author img

By

Published : Oct 1, 2020, 10:33 PM IST

2018ஆம் ஆண்டை காட்டிலும் 2019ஆம் ஆண்டில் நாட்டில் பழங்குடியினர் மீதான குற்றங்கள் 26 விழுக்காடும், பட்டியலின மக்கள் மீதான குற்றங்கள் 7 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்ததற்காக மொத்தம் 45 ஆயிரத்து 935 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டில் இதுபோன்று 42 ஆயிரத்து 793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக பட்டியிலின மக்கள் மீதான குற்றங்கள் 7.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பட்டியிலின மக்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் பட்டியலில் 11 ஆயிரத்து 829 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் மற்றும் பிகார் மாநிலங்கள் உள்ளன.

பாலியல் வன்புணர்வு

பாலியல் வன்புணர்வு வழக்குகளை பொறுத்தமட்டில் 554 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 537 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 510 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் உள்ளது. பழங்குடியின மக்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகள் 2018ஆம் ஆண்டில் ஆறு ஆயிரத்து 528 பதிவாகியிருந்தன.

இதில் அதிகப்பட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 1, 922 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் (1,797), ஒடிசா (576) உள்ளன. பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களிலும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் வருகின்றன.

இதர குற்றங்கள்

2019ஆம் ஆண்டில் 32 லட்சத்து 25 ஆயிரத்து 701 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது 2018ஐ விட 1.6 விழுக்காடு அதிகமாகும். இதேபோல் 2018 ஆம் ஆண்டில், மூன்று லட்சத்து 78 ஆயிரத்து 236 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக பதிவாகியுள்ளன.

இதே மாதிரியான குற்றங்கள் ​​2019 ஆம் ஆண்டில் நான்கு லட்சத்து ஐந்து ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளன. இது 7.3% அதிகமாகும்.

இணையதள குற்றங்கள்

சைபர் கிரைம்கள் 2019 இல் 63.5% அதிகரித்துள்ளன. 2018 ஆம் ஆண்டில் 27 ஆயிரத்து 248 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, ​​மொத்தம் 44 ஆயிரத்து 546 வழக்குகள் சைபர் கிரைம்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டில், பதிவுசெய்யப்பட்ட சைபர் கிரைம் வழக்குகளில் 60.4% மோசடியின் நோக்கத்திற்காக (44,546 வழக்குகளில் 26,891) பாலியல் சுரண்டலாகவும் இருந்தன.

இதையும் படிங்க: பள்ளி மாணவியின் படத்தை ஆபாசமாகச் சித்திரித்து வெளியிட்ட கல்லூரி மாணவன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.