ETV Bharat / bharat

முப்படை தலைமைத் தளபதி பதவி சாதகமா? பாதகமா? - முப்படை தலைமைத் தளபதி

பிரதமர் நரசிம்மராவ் இந்திய பொருளாதாரத்திற்கு என்ன செய்தாரோ அதுபோல் பிரதமர் மோடியால் பாதுகாப்புத் துறையில் செய்து காட்ட முடியுமா? என்ற கேள்வி முப்படை தலைமைத் தளபதி பதவி உருவாக்கியதைத் தொடர்ந்து எழுந்துள்ளது.

CDS
CDS
author img

By

Published : Dec 28, 2019, 8:53 PM IST

முப்படை தலைமைத் தளபதி (Chief of Defence Staff - சி.டி.எஸ்) என்ற பதவி உருவாக்கப்படுகிறது. நிர்வாகத்தின் உயர்பாதுகாப்பு கட்டமைப்பில் இப்பதவி முக்கிய பங்காற்றும் என்ற (டிசம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட) முடிவு எச்சரிக்கையுடன் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

இந்நடவடிக்கையை எடுத்ததற்காக மோடி அரசை பாராட்டும் அதேவேளை, முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்கும் யோசனை 2001ஆம் ஆண்டிலேயே உருவான ஒன்று என்பதை நினைவூட்ட வேண்டும். இதில் உண்மையான சவால் என்பது இப்பதவிக்கு அதிகாரம் அளிக்கும் முறையையும் நியமனத்தையும் இந்தியாவின் ஆட்சிமுறைக்கு உட்பட்டு செய்யப்படுவதில் இருக்கிறது.

நாட்டு மக்களது உச்சபட்ச அமைப்புக்கு ராணுவ விவாகரங்கள் குறித்த ஆலோசனையை தர முப்படை தலைமைத் தளபதி பதவி முக்கிய பங்காற்றவுள்ளது. இதுபோன்று பல்வேறு விவகாரங்கள் பொதுதளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. முப்படை தலைமைத் தளபதி பணி என்பது, ஒரு வானளாவிய அதிகாரம் கொண்டதாக எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தற்போதைய ராணுவத் தலைமை பதவிக்கு மேலானதாகவும் அதற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கவும் சிலர் பரிந்துரை செய்திருந்தனர். இந்த பதவியால் இந்தியாவுடனான உறவில் நிகழவுள்ள மாற்றங்கள் குறித்து பல ஜனநாயக நாடுகள் மதிப்பாய்வு செய்துவருகின்றன.

எப்படியானாலும், இறுதியாக வெளிவந்திருப்பது இந்தியாவுக்கான மாதிரியாகும். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான மோடி அரசின் அணுகுமுறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. முப்படை தலைமைத் தளபதி குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை தெளிவாக கூறுவது என்னவென்றால், "அனைத்து முப்படை விவகாரங்களிலும் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக அவர் செயல்படுவார். முப்படை தளபதிகளும் தத்தமது துறை தொடர்பான பிரத்யேக விவகாரங்களில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனைகளை தொடர்ந்து வழங்குவார். முப்படை தளபதிகள் உட்பட யாருக்கும் எந்த ராணுவ உத்தரவுகளையும், முப்படை தலைமைத் தளபதி பிறப்பிக்கமாட்டார். அரசியல் தலைமைக்கு சார்பற்ற ஆலோசனைகளை அவரால் வழங்க முடியும்".

எனவே, முப்படை தலைமைத் தளபதி என்பவர், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ‘முதன்மை ஆலோசகராக’ இருப்பாரே தவிர தலைமை ஆலோசகராக இருக்கமாட்டார். மேலும், முப்படை தலைமைத் தளபதி, இரண்டு பொறுப்புகளை கொண்டிருப்பார். ஒன்று, ராணுவ குழுக்களின் தலைவர். இரண்டாவது, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்படும் ராணுவ விவகாரங்கள் துறை (டி.எம்.ஏ.) தேவைப்பட்டால் அதன் செயலாளராக தலைவரே செயல்படுவார்.

முப்படை தலைமைத் தளபதிக்கான ஊதியம் முப்படை தளபதிகளுக்கு சமமான சம்பளம் மற்றும் சிறப்பதிகாரம் போலவே வழங்கப்படும். ஆனால், உயர் அதிகார படிநிலையில் பார்த்தால், முப்படை தளபதிகளைவிட உயர்ந்த அந்தஸ்தை அவர் கொண்டிருப்பார்.

ஆயுதக் கொள்முதலில் கூட்டாக செயல்படுதல், ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சேவைகளுக்கான பயிற்சி, பணி நியமனம் மற்றும் அவற்றின் தேவைகளை ஒருங்கிணைத்தல், கூட்டு கட்டளைகளை நிறுவுதல் போன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல், ராணுவ உத்தரவுகளை மறுசீரமைக்கும் வசதி மற்றும் சேவைகளில் உள்நாட்டு உபகரணங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவை முப்படை தலைமைத் தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களாக பார்க்கப்படுகிறது.

முப்படை தலைமைத் தளபதி தலைமையில் உருவாக்கப்படும் ராணுவ விவகாரங்கள் துறை (டி.எம்.ஏ.), மக்கள் - ராணுவம் ஆகியவைக்கு இடையேயான உறவுகளில் மேற்கொள்ளவுள்ள முதல் முக்கிய நடவடிக்கையாகும். இது, கேடில்லாத, வழக்கமான ஒன்றாகவே தெரிகிறது. முப்படை தலைமைத் தளபதி, செயலர் அதிகாரம் பெற்று ஆட்சி சுழற்சியில் இந்திய ராணுவம் முறையாக சேர்க்கப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

தற்போது வர்த்தக விதிகளின்படி இந்தியாவின் பாதுகாப்பிற்கான பொறுப்பு, அமைச்சகத்தின் மூத்த அரசு பணியாளரான பாதுகாப்பு செயலருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. முப்படை தலைமைத் தளபதி பதவி என்பது எவ்வாறு ஆளுகைக்கு உட்படுத்தப்படும் என்பதும், பாதுகாப்புச் செயலாளரை போலவே இந்த பதவியும் செயல்படுத்தப்படுமா அல்லது ஒரு முன்னாள் அலுவலருக்கான அந்தஸ்து வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மூன்று முக்கிய நோக்கங்களைத் தொடர, முப்படை தலைமைத் தளபதிக்கு இது முக்கியமானதாக இருக்கும். அவை ஒவ்வொன்றும் அதன் சொந்த களத்தில் மிகப்பெரியவை என உணரப்படும்போது, அவை இந்திய ராணுவத்தின் தோற்றத்தையும், செயல்திறனையும் மாற்றும். 1999ஆம் ஆண்டு கார்கில் போருக்குப் பின்னர் இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்ட தேவையை பூர்த்தி செய்வதற்கு மோடி அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இவை வெற்றிகரமாக தொடர, பல ஆண்டுகளுக்கு விடாமுயற்சியும் உயர் தொழில்முறை ஒருங்கிணைப்பும் தேவை.

முப்படை தலைமைத் தளபதியின் செயல்திறனை நிர்ணயிக்கும் மற்ற முக்கியமான அம்சங்கள், வளங்களை - அதாவது மனிதவளம் மற்றும் நிதி வளம் ஒதுக்கீடுகள் செய்வதாகும். ஆண்டு பட்ஜெட்டில் ஆயுதப்படைகளுக்கு நிதி ஆதாரங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கீடு செய்வதை பொறுத்தே உருவாக்கப்படும் பதவியின் செயல்திறன் இருக்கும்.

தற்போது பாதுகாப்பு பட்ஜெட்டில், இருப்பவற்றை நவீனமயமாக்குவதற்கு போதுமான ஏற்பாடுகள் இல்லை. சைபர்-ஸ்பேஸ்-ஸ்பெக்ட்ரம் டொமைன் போன்ற புதிய தொழில்நுட்ப திறன்களை பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. தற்போதைய ஒதுக்கீடுகளை அதாவது ஆண்டு ஒதுக்கீடு மற்றும் 15 ஆண்டு முன்னோக்கு திட்ட ஒதுக்கீடு ஆகிய இரண்டையும் முப்படை தலைமை தளபதி என்ற அமைப்பு, மேலோங்கச் செய்துவிட முடியுமா?

தேவையான தொழில்முறை அனுபவத்தை வழங்குதல் மற்றும் இந்தியாவின் உயர் பாதுகாப்பு நிர்வாகத்தில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சீர்திருத்தங்களை வழிநடத்த 'ஆம் அமைச்சரே' என்ற புத்திசாலித்தனம், முப்படை தலைமைத் தளபதி முன் உள்ள கடினமான பணியாகும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், இறுதியில் மோடி அரசு இந்த விவகாரத்தை கையில் எடுத்ததுதான். ராணுவ விவகாரங்கள் துறை மற்றும் முப்படை தலைமைத் தளபதி ஆகியோர், முக்கிய பங்குதாரர்களாக - அரசியல் தலைமை, அதிகாரத்துவம் மற்றும் ராணுவம் ஆகியவற்றால் எவ்வளவு உறுதியுடன் வளர்க்கப்படுவார்கள் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். இது, எதிர்வரும் தசாப்தங்களில் இந்தியாவின் கலப்பு ராணுவத் திறனின் அமைப்பு மற்றும் குறியீட்டை வடிவமைக்கும். பிரதமர் நரசிம்மராவ் இந்திய பொருளாதாரத்திற்கு என்ன செய்தாரோ அதுபோல் பிரதமர் மோடியால் பாதுகாப்புத் துறையில் செய்து காட்ட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவுடன் நெருக்கமாகும் உஸ்பெகிஸ்தான்?

Intro:Body:

CREATION OF CDS POST TO BE CAUTIOUSLY WELCOMED

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.