மக்களவைத் தேர்தலையொட்டி பல அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த வரிசையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிதாராம் யெச்சூரி இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையில், தற்போதுள்ள தேச துரோக சட்டத்தை நீக்குவதற்கு வழிமுறை செய்யப்படும் எனவும், சொத்துவரி மறுசீரமைப்புக்கு உட்படுத்த வழிமுறை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நகர்புறத்தில் வாழ்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் எனவும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்தி விலையை காட்டிலும் 50 விழுக்காடு உயர்த்தி தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும், மாநிலம் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.