காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் முகமது யூசப் தரிகாமியும் அம்மாநில காவல் துறையால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்ட முகமது யூசப் தரிகாமை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர்களை ஆலோசித்துவிட்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில், முகமது யூசப் தரிகாமை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், குடும்ப உறுப்பினர் ஒருவர் அவரின் உதவிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.