அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பம் முதலே இச்சட்டத்தை எதிர்த்து வரும் நிலையில், இந்திய அரசியலமைப்பை காப்பாற்றும் நோக்கில் குடியரசு தினம் தொடங்கி காந்தி நினைவு நாள் வரை நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்ள அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் டி.ராஜா, 'வரும் ஜனவரி 26ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை நாட்டு மக்களுக்கு எழுச்சி தரும் நோக்கில் தொடர் பரப்புரையை நிகழ்த்தவுள்ளோம். அரசியலமைப்பைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம், இந்தியாவைக் காப்போம் என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள இந்த பரப்புரை அன்னல் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி நிறைவடையும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு - விசாரணைக்கு வந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு!