டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
![விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் போராட்டம் மார்க்சிஸ்ட் போராட்டம் டி.ராஜா ஹன்னம் மொல்லா வேளாண் CPI protest in Delhi on farm issue CPI protest in Delhi farm issue](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20201202-wa0026_0212newsroom_1606914828_516.jpg)
இந்தப் போராட்டம் 7ஆம் நாளாக இன்றும் தொடர்ந்தது. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு கிடைத்துவருகிறது.
தமிழ்நாட்டிலும் மாவட்டம், தாலுகா பகுதிகளில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு ஊறுவிளைவித்து, விவசாயிகள், விவசாயத்தை அழித்து, நாட்டின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்லியில் இன்று (டிச.2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் போராட்டம் மார்க்சிஸ்ட் போராட்டம் டி.ராஜா ஹன்னம் மொல்லா வேளாண் CPI protest in Delhi on farm issue CPI protest in Delhi farm issue](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20201202-wa0024_0212newsroom_1606914828_745.jpg)
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஹன்னம் மொல்லா, பிருந்தா காரத், பொதுச்செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் எம்பி கே.கே. ராகேஷ், டெல்லி மாநில பொதுச்செயலாளர் கே.எம். திவாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம்; பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ!