ETV Bharat / bharat

பிரதமரின் சுதந்திர தின உரைக்காக அவசரப்படுத்தப்படுகிறதா தடுப்பூசி உருவாக்கம் ?

author img

By

Published : Jul 4, 2020, 10:04 PM IST

டெல்லி : பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின் போது தடுப்பூசி மருந்தை வெளியிடுவதற்காக ஐ.சி.எம்.ஆர் கோவிட் -19 தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்த முயற்சிப்பதாக சிபிஐ(எம்) குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரதமரின் சுதந்திர தின உரைக்காக அவசரப்படுத்தப்படுகிறதா தடுப்பூசி உருவாக்கம் ?
பிரதமரின் சுதந்திர தின உரைக்காக அவசரப்படுத்தப்படுகிறதா தடுப்பூசி உருவாக்கம் ?

இது தொடர்பாக சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய தொற்றுநோயான கோவிட்-19க்கு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு காலக்கெடு வைத்து அழுத்தம் கொடுப்பதாகவே அறிய முடிகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) பெருந்தொற்றுநோயான கரோனா வைரஸுக்கு தடுப்பூசி ஒன்றை உருவாக்குவதை மிகுந்த வேகப்படுத்த முயற்சிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதற்காக (ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்) பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பூசியான கோ வேக்ஸினின் விரைவான மருத்துவ சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்து மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உச்ச ஆராய்ச்சி குழு முன்வந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்தியாவில் உருவாக்கப்படும் மருந்துகளுக்கு பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான ஆதாரங்களை ஒழுங்குபடுத்த (டி.சி.ஜி.ஐ) வேண்டும். அத்தகைய ஒப்புதல் ஏதுமில்லாமல் தடுப்பூசி வெளியீட்டு தேதியை ஐ.சி.எம்.ஆர் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று தெரியவில்லை. ஒரு தடுப்பூசி தொற்றுநோயிலிருந்து மிகவும் தீர்க்கமான மீட்பாக இருக்கும். உலகம் ஒரு பாதுகாப்பான தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. இந்த தடுப்பூசி உலகளவில் அணுகக்கூடிய ஒன்று என்பதை மறந்து அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கைவிட்டு, இந்த தேதியில் கொடுக்க வேண்டும் என 'ஆர்டர் செய்ய முடியாது'.

உள்நாட்டில் உருவாக்கப்படும் தடுப்பூசியை உடனடியாக உருவாக்க கட்டாயப்படுத்துவது தவறு. சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியால் அறிவிக்கப்படவுள்ளவை. அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறியவையாகவே கருதப்படும். ஐ.சி.எம்.ஆர் நிறுவனம், தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் மருத்துவ நிறுவனங்களை அச்சுறுத்தப் பயன்படுத்துப்படுகிறது. டி.சி.ஜி.ஐ கட்டுப்பாடு இல்லாமல், பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான ஆதாரங்களை மதிப்பீடு செய்யாமல் தடுப்பூசி வெளியீட்டு தேதியை ஐ.சி.எம்.ஆர் எவ்வாறு தீர்மானிக்க முடியும் ?

இந்த சோதனையில் ஆய்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை என்ன? ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் 1, 2 மற்றும் 3 கட்ட சோதனைகள் நிறைவு செய்யப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்படுமா? இது போன்ற சில தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.