இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான குருதாஸ் தாஸ் குப்தா கொல்கத்தாவில் இன்று காலமானார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்துவந்த குருதாஸ் தாஸ்குப்தா இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பேச்சாற்றலுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கும் பெயர்போன குருதாஸ் தாஸ் குப்தா 1985ஆம் ஆண்டு முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு பனஸ்குரா மக்களவைத் தொகுதியிலும், 2009ஆம் ஆண்டு கட்டால் மக்களவைத் தொகுதியிலும் வெற்றிபெற்று, மக்களவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய குரலாக ஒலித்தார்.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபின் கட்சி நடவடிக்கையிலிருந்து விலகிக்கொண்டாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகத் தொடர்ந்து நீடித்துவந்தார். குருதாஸ் தாஸ் குப்தாவின் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா, குருதாஸ் தாஸ் குப்தாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தலைசிறந்த நாடாளுமன்றவாதியையும், தொழிலாளர் பிரதிநிதியையும் நாடு இழந்துள்ளது என்று தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
-
Passing away of veteran leader and trade unionist Gurudas Dasgupta is a big loss for the nation.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He will always be remembered for his brilliant parliamentary track record and probity in public life.
">Passing away of veteran leader and trade unionist Gurudas Dasgupta is a big loss for the nation.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 31, 2019
He will always be remembered for his brilliant parliamentary track record and probity in public life.Passing away of veteran leader and trade unionist Gurudas Dasgupta is a big loss for the nation.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 31, 2019
He will always be remembered for his brilliant parliamentary track record and probity in public life.
இதையும் படிங்க: அலையோடு போராடும் மீனவர்களுக்கு வருமானம் அள்ளித்தரும் கூண்டு மீன்வளர்ப்பு!