பெங்களூரு (கர்நாடகம்): பசுவதை தடுப்பு சட்டம் மாநிலம் முழுவதிலும் ஜனவரி 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு மசோதா டிசம்பர் 2020இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும் வேளையில், மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 18ஆம் தேதி முதல் இச்சட்டம் மாநிலம் முழுவதிலும் முழுவீச்சில் அமல்படுத்தப்படுமென அமைச்சர் பிரபு சவுகான் தெரிவித்துள்ளார்.