டெல்லி: நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி சுகாதாரத் துறை பணியாளர்கள், இரண்டு கோடி முன்களப் பணியாளர்கள் என மொத்தம் மூன்று கோடி பேருக்கு முதற்கட்டமாக இலவச கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முன்னதாக அறிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கரோனாவுக்கு எதிராகப் போராடிவரும் முன்களப்பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய டெல்லி ஜிடிபி மருத்துவமனை கண்காணிப்பாளர் அமித் கூறுகையில், "முன்களப் பணியாளர்களுக்கு இலவச கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
நாங்கள் பணி முடித்து வீடு திரும்பும் நேரங்களில் எங்களைக் கண்டு குடும்ப உறுப்பினர்கள் அஞ்சுவர். தற்போது அவர்களது கவலை நீங்கியுள்ளது" என்றார்.
முதற்கட்டமாக நாட்டிலுள்ள 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்தை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இதில் மூன்று கோடி முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி முதியவர்கள் அடங்குவர்.
இதையும் படிங்க: தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்