ETV Bharat / bharat

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த கரோனா நோயாளி : செவிலியர் வெளியிட்ட ஆடியோ! - மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் கரோனா நோயாளி உயிரிழப்பு

எர்ணாகுளம் : கேரளாவில் மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் கரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்து விட்டதாக செவிலியர் ஒருவர் கூறும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த கரோனா நோயாளி: செவிலியர் வெளியிட்டுள்ள பகிர் ஆடியோ

author img

By

Published : Oct 19, 2020, 1:30 PM IST

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் அமைந்துள்ள கலாமாஸ்ஸரி மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நோயாளி ஒருவர் முன்னதாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட வேண்டியவர் என்றும், மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்றும் செவிலியர் ஒருவர் கூறும் அதிர்ச்சியூட்டும் ஆடியோ பதிவு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதில், வென்டிலேட்டர் குழாய் மாற்றப்பட்டதே நோயாளியின் மரணத்திற்கு வழிவகுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தை மருத்துவர்கள் பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாகவும், மத்தியக் குழு ஆய்வுக்கு வருவதற்கு முன்பாகவே இது குறித்து ஊழியர்களுக்கு ரகசியச் செய்தி அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அம்மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மாநில அரசாங்கம் அலட்சியம் காட்டுவதாகவும், மாநிலத்தில் பாதுகாப்பான சிகிச்சையை வழங்கத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.