கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிகார் சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 125 இடங்களை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் பிகார் சட்டப்பேரவை தேர்தலின்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மேலும், வாக்குப்பதிவின் போது வாக்குபதிவு அலுவலர்களுக்கும் வாக்காளர்களுக்கும் கரோனா பரவல் ஏற்பட்டுவிடாமல் இருக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. இதற்காகவே, 18 லட்சம் முகக் கவசங்கள்(Face shields), 70 லட்சம் மாஸ்க்குகள்(Face masks), அலுவலர்களுக்கு 5.4 லட்சம் கையுறைகள், வாக்காளர்களுக்கு 7.21 கோடி கையுறைகளை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வாங்கியிருந்தது. மேலும், 29 லட்சம் சானிடைசர் பாட்டில்களும் வாங்கப்பட்டிருந்தது.
இதனால் மாஸ்க், க்ளவுஸ்,கையுறை, சானிடைசர் என சுமார் 160 டன் பயோ கழிவுகள் பிகார் தேர்தலின்போது சேகரிக்கப்பட்டதாக பிகாரின் தலைமை தேர்தல் அலுவலர் ஹேச்.ஆர். ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
பயோ கழிவுகளை சேகரிக்கும் பணிகள் குறித்து பேசிய அவர், "பயோ கழிவுகளை சேகரிக்க தனி வாகங்கள், நபர்கள் இருந்ததனர். இவ்வாறு ஒவ்வொரு அணிக்கும் 10 முதல் 15 வாக்குப்பதிவு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் எங்களால் பயோ கழிவுகளை எளிதாக சேகரிக்க முடிந்தது" என்றார்.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமிய குடும்பம்!