நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 87 லட்சத்து 73 ஆயிரத்து 479ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (நவ.13) ஒரே நாளில் 520 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 188ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு விழுக்காடு 1.47ஆகக் குறைந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 80 ஆயிரத்து 714ஆகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 5.48 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்தாலும் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 81 லட்சத்து 63 ஆயிரத்து 572ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.04 விழுக்காடாக உயர்ந்துள்ளது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
இதையும் படிங்க : கரோனாவை தடுப்பு மருந்து இல்லாமலும் கட்டுப்படுத்தலாம் - எய்மஸ் இயக்குநர்