ETV Bharat / bharat

350 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த மேக் மை ட்ரிப்!

author img

By

Published : Jun 1, 2020, 8:20 PM IST

டெல்லி : கரோனா வைரஸால் முடங்கியுள்ள ஆன்லைன் பயணச் சேவை நிறுவனமான மேக் மை ட்ரிப், 350 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.

MakeMyTrip lays off
MakeMyTrip lays off

அசுர வேகத்தில் பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு காரணமாகப் பல நிறுவனங்கள், திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, சுற்றுலாத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், வரலாறு காணாத அளவுக்கு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இந்நிலையில் பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பயணச் சேவைகளை ஆன்லைன் மூலம் அளித்து வரும் மேக் மை ட்ரிப் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக 350 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து மேக் மை ட்ரிப் ஊழியர்களுக்கு அந்நிறுவன தலைமை செயல் அலுவலர் ராஜேஷ் மாகௌ எழுதியுள்ள கடிதத்தில், "இந்தப் பெருந்தொற்று இத்துறையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்த வருத்தத்திற்குரிய முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். சுற்றுலாத் துறை எப்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரியவில்லை.

வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நோட்டீஸ் பீரியட் வரை, லீவ் எடுத்துக்கொள்ளலாம். நிறுவனம் அளித்த மடிக்கணினியையும் வைத்துக்கொள்ளலாம். மீதமுள்ள சம்பளம் முறையாக நேரத்தில் வழங்கப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உச்சமடையும் போராட்டம்... பதுங்கு குழிக்குள் ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.