டெல்லி சுகாதாரத்துறை இன்று நண்பகல் மூன்று மணிக்கு வெளியிட்டத் தகவலின் படி, மாநிலத்தில் இன்று புதிதாக 660 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரேநாளில் அதிகபட்சமாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும். நேற்று அதிகபட்சமாக 571 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதன்மூலம், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,319ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் இன்று 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 208ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பெருந்தொற்றிலிருந்து இதுவரை 5,897 பேர் குணமடைந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தற்போது டெல்லியில் 6,214 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுநாள் வரை மாநிலத்தில் 1,60,255 மாதிரிகள் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மேலும் 15 பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
இதன்மூலம், மாநிலத்தில் 64இல் இருந்து கட்டுப்பாட்டு மண்டலங்கள் 79ஆக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச எல்லையில் நேபாள தொழிலாளர்கள் முற்றுகை!