சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட் - 19 (கொரோனா) என்ற வைரஸ் தொற்று நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கர்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர், கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் இன்று உயிரிழந்தார். கோவிட்-19 வைரஸ் காரணமாக இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.
இந்தியாவில் இதுவரை 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்த நிலையில், முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க : 'பதற்றம் வேண்டாம்... தேவை முன்னெச்சரிக்கையே' - பிரதமர் அறிவுறுத்தல்