ETV Bharat / bharat

கரோனா: மனித குலத்திற்கு அன்னை பூமி உணர்த்தும் பாடம் - தலாய்லாமா - தலாய் லாமா கரோனா பெருந்தொற்று

தரம்சாலா: கரோனா வைரஸ் பாதிப்பு என்பது அன்னை பூமி மனித குலத்திற்கு உணர்த்தும் பாடமாகும் என புத்த மதத்துறவி தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

Dalai
Dalai
author img

By

Published : Apr 23, 2020, 1:09 PM IST

50ஆவது பூமி தினம் உலகளவில் இந்த வாரம் சிறப்பு நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது. உலகம் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் இந்தச் சூழலில் உலகத் தலைவர்கள் பூமி தினம் குறித்து தங்களின் கருத்துகளை பகிர்ந்துவருகின்றனர்.

அந்தவகையில், திபெத்திய மக்களின் தலைவரும், புத்தமதத் துறவியுமான தலாய்லாமா, பூமி தினம் வாழ்த்துச் செய்தியை தற்போது தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ”இந்த போராட்டக் காலத்தில் மனித குலம் சகோதரத்துவத்தையும், அன்பையும் பகிரவேண்டியது அவசியம்.

இந்த பெருந்தொற்று இனம், கலாசாரம், சாதி, மதம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து பாதித்துவருகிறது. எனவே, மனித குலம் ஒன்றிணைந்து போராடி இந்த பெருந்தொற்றை வெல்ல வேண்டும்.

கரோனா பாதிப்பு என்பது மனிதகுலத்திற்கு அன்னை பூமி கொடுத்த படிப்பினை. மனித குலம் இதை உணர்ந்து அதீத நுகர்வு வெறியிலிருந்து வெளியேறி, சீரான வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா நேரத்தில் மலேரியாவுடன் போராடும் ஜிம்பாவே

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.