சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸானது, இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், மேலும் இருவருக்கு முதற்கட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெலங்கானா மாநில அரசு அதிகரித்துள்ளது. அதன்படி மக்கள் அதிகளவில் கூடக்கூடிய இடங்களான மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிலையம், அரசுப் பேருந்துகள், ரயில் நிலையம் போன்றவற்றில் மாநில சுகாதாரத் துறை ஊழியர்கள் தீவிர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை