கரோனா வைரஸால் தெலங்கானா மாநிலத்தில் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதுவரை ஒருவர் உயிரிழந்தார். கரோனாவால் மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் நிதி நெருக்கடியைப் பற்றி ஆலோசிக்க பிரகதி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ''கரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க முதலமைச்சர், மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேயர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவருக்கும் 75 விழுக்காடு சம்பளம் பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு 60 விழுக்காடு சம்பளம் பிடிக்கப்படும். மற்ற அரசு நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் 50 விழுக்காடு சம்பளம் பிடிக்கப்படும்.
நான்காம் நிலை அரசு அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோருக்கு 10 விழுக்காடு சம்பளம் பிடிக்கப்படும்” என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்டவர்களின் செல்போன்களைக் கண்காணிக்கும் ஆந்திர அரசு!