சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாகவும், 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள 3.5 லட்சம் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதன்மைச் செயலர் ரோஹித் கன்சல் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'திருமணம் நடைபெற்றிருந்தால் தவறான முன்னுதாரணமாகியிருப்போம்'