மே 12ஆம் தேதி காணொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணிக நிறுவனங்கள் குறிப்பாகச் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பேணிக்காக்கத் துணிச்சலான முடிவுகளை அரசு எடுக்கும் எனத் தெளிவாகக் கூறியிருந்தார்.
அவர் சொன்னபடி, புதன்கிழை அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரம்மாண்டமான திட்டங்களை அறிவித்தார். அந்த திட்டங்கள் தொழில் துறைகளின் குறுகிய கால பணத்தேவைக்கு மட்டுமின்றி, அவற்றின் எதிர்காலத்தை வளர்ச்சியைப் பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
அடிப்படை சீர்திருத்தம்
இனிவரும் காலங்களில், ரூ. ஒரு கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என்றும், ரூ.50 கோடி, ரூ.100 கோடி வருமானம் ஈட்டுபவை முறையே குறு, நடுத்தர நிறுவனங்களாகக் கருதப்படும் என நிர்மலா அறிவித்துள்ளார்.
இந்த அடிப்படையான மாற்றத்தைக் காண இத்துறை நிறுவனங்கள் இத்தனைக் காலம் காத்திருப்பு பரிதாபத்துக்குரியது. கடந்த காலத்தில், சிறு அல்லது குறு துறைகளுக்குள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டன. சர்வதேச சந்தைகளில் காணப்படுவது போன்று வருமான வரம்புகளை அடிப்படையாகக் கொள்ளாமல், முதலீட்டு வரம்புகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தியது மோசமான முடிவு.
ஆனால், இவை அனைத்தும் தற்போது காணாமல் போய்விட்டன. தற்கால வகைப்படுத்தலில் முதலீட்டோடு, வருமானமும் அடிப்படையாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வரம்புகள் அனைத்தும் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன. ஆகையால் தான், தற்போது ரூ. 99 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனம் நடுத்தர நிறுவனமாகவும், 4.9 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனம் குறு நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கியம் வரும் காலங்களிலேயே நமக்குத் தெரியவரும். நிறுவனங்கள் அதிக வளர்ச்சியை அடைய முயற்சிக்கும். இருப்பு நிலையை மறைப்பதற்கான தேவை குறையும். வருமானம் அதிகரித்தால் நிறுவனங்கள் பெரிய ஒப்புதல்களை மேற்கொள்ளும், வங்கிகளில் கடன் வாங்குவதை அதிகரிக்கும்.
இந்த அடிப்படை சீர்திருத்தம், நிறுவனங்கள் விதி மீறலில் ஈடுபடுவதைப் பெருமளவு குறைக்கும்.
கடன் உத்தரவாதம்
நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் குறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தடையின்றி செயல்பட, அவற்றுக்கு ரூ.மூன்று லட்சம் கோடி பிணையில்லா கடன் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பானது வேலை உற்பத்திக்கும், வங்கிகளிடம் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கும் வழிவகை செய்யும். மேலும், இந்த பல லட்சம் கோடி நிவாரண திட்டத்தால் பணப்புழக்கம் அதிகரித்து, நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீள உதவும்.
அவசர கடன் தேவைக்கும் உதவும் இந்த திட்டம் மூலம், நிறுவனங்கள் அக்டோபர் 31ஆம் தேதிவரை கடன் பெறமுடியும். தகுதியுடைய 45 லட்சம் நிறுவனங்கள் நான்கு-ஆண்டு கடன் பெறவும், அந்த கடனின் அசலை ஓராண்டுக்குப் பிறகே திரும்பி செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடனின் வட்டியில் எந்த மாற்றமும் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கடன் நெருக்கடியால் நலிவுற்றுக் கிடக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளோடு சேர்ந்து, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் கொண்டுவரப்பட்டுள்ள மாறுதல்கள் பலரின் வேலையைக் காப்பாற்றும்.
மலரும் நம்பிக்கை
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி முதலீட்டுக்கு வழி வகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கோவிட்-19ஆல் முடங்கியுள்ள நிறுவனங்களை எழுந்து நடக்கச் செய்ய இது உதவும்.
இது 'Venture Capital' எனப்படும் துணிகர மூதலனத்தன முதலீடு முறையை ஓரளவு ஒத்திருக்கிறது. ஆனால், கோவிட்-19 பேரிடரிலிருந்து நிறுவனங்களைக் கரை சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.
சர்வதேச டென்டர்களுக்கு அனுமதி இல்லை
'உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுங்கள்' எனப் பிரதமர் நரேந்திர மோடி தன் செவ்வாய்க்கிழமை உரையில் அறைகூவல் விடுத்திருந்தார். அதே அலைவரிசையில் நிர்மலா சீதாராமன், "ரூ.200 கோடிக்கும் குறைவான அரசாங்க டென்டர்களை எடுக்க வெளிநாட்டவருக்கு அனுமதி கிடையாது" என அறிவித்திருக்கிறார்.
இந்த முன்னெடுப்பானது, புதிய உள்ளூர் தொழில் நிறுவனங்களையும், வினியோகஸ்தர்களையும் உருவாக்க உதவும்.
இந்த அறிவிப்பின் நோக்கம் என்னமோ சரிதான். ஆனால், அது எப்படி செயல்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நல்ல பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை எப்படி அரசாங்கம் உறுதி செய்யும் என்பது தெரியவில்லை.
கடந்த காலத்தில் சர்வதேச டென்டர்கள் இல்லாமை, அரசாங்க நிறுவனத்தின் ஒப்பந்தங்களினால் உயிர்வாழும் நிறுவனங்களையே உருவாக்கியது. தற்சார்பை உறுதிசெய்தது, ஆனால் தரம் அடிவாங்கியது.
இதையும் படிங்க : ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை - சத்யேந்தர் ஜெயின்