கரோனா பாதிப்பு காரணமாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, தற்போது வரிசையாக பல்வேறு முக்கிய அறிஞர்கள், வல்லுநர்களிடம் காணொலி அழைப்பின் மூலம் உரையாடி வருகிறார். இந்தியாவில் நடக்கும் பிரச்னைகள், லாக் டவுன், கரோனா பரவல், பொருளாதார சரிவு என்று பல விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி உரையாடி வருகிறார்.
இந்நிலையில் அவ்வப்போது அரசாங்கத்தை குற்றம்சாட்டி வந்த ராகுல் காந்தி, தற்போது மேலும் அரசாங்கத்தை சாடியுள்ளார். அதில், 'கரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு வந்துள்ளது.
இது அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறது. மேலும் மோடியின் இயலாமையையும், ஆணவத்தையும் காட்டுகிறது' என ராகுல் காந்தி சாடியுள்ளார். கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன் தினம் (ஜூன் 12) ஒரே நாளில் 10,956 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோமதி மாரிமுத்துவுக்கு நான்கு ஆண்டுகள் தடை!