ETV Bharat / bharat

பலன் அளிக்கிறதா பிளாஸ்மா சிகிச்சை... ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

டெல்லி: கரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதன் மூலம் ஓரளவு நன்மை ஏற்படுவதாக புதிய ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 plasma therapy
COVID-19 plasma therapy
author img

By

Published : Oct 24, 2020, 7:28 AM IST

கரோனா தொற்றுக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆராய்ச்சியாளர்கள் பல முறைகளைக் கையாண்டுவருகின்றனர்.

அதன்படி, இந்தியாவில் முதலில் டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை பின்பற்றப்பட்டது. இந்த முறையின்படி ஏற்கெனவே கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து, தற்போது சிகிச்சை பெற்றுவருவபர்களின் உடலில் செலுத்தப்படும். இதன் மூலம் அவர்களது உடலில் ஆன்ட்டிபாடி உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த சிகிச்சை முறை குறித்த ஆய்வு முடிவுகளை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதன் மூலம் ஓரளவு நன்மை ஏற்படுவதாக அதில் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 464 பேரின் சிகிச்சை குறித்த தரவுகள் இதில் கணக்கிடப்பட்டுள்ளன. அவர்களில் 239 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் 229 பேருக்கு சாதாரண சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத சிகிச்சைக்குப் பின், பிளாஸ்மா சிகிச்சை பெற்றுவந்த 44 நோயாளிகள், அதாவது 19 விழுக்காடு பேருக்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது அல்லது உயிரிழந்துவிட்டனர். அதே நேரம் சாதாரண முறையில் சிகிச்சை பெற்றவர்களில் 41 பேர் அல்லது 18 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் அதில், "பிளாஸ்மா சிகிச்சை மூலம் நோயின் தாக்கம் குறைகிறது என்பதற்கோ உயிரிழப்புகள் குறைக்கின்றன என்பதற்கோ ஆதாரம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே இது குறித்து கூறுகையில், "இதுவரை பிளாஸ்மா சிகிச்சை குறித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வு இதுவாகும். இருப்பினும், வெறும் சில 100 பேரின் சிகிச்சை முடிவுகளை வைத்துக்கொண்டு நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியாது.

பிளாஸ்மா சிகிச்சை முறையின் தாக்கம் ஏமாற்றம் அளிக்கிறது என்றாலும் இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான், பெரியளவில் எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்புமருந்து: இறுதிகட்ட மருத்துவ சோதனையில் பாரத் பயோடெக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.