இந்தியாவில் இதுவரை 41.13 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரேசில் 40.41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (செப்.5) இந்தியா பிரேசிலைவிட அதிகமாக ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கரோனா தொடங்கியதிலிருந்து ஒரேநாளில் 75 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று உறுதிசெய்யப்டவர்களின் எண்ணிக்கை எந்த நாட்டிலும் பதிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.