ETV Bharat / bharat

கரோனா தொற்றிலிருந்து மீள ஒத்துழைப்பும் ஒருங்கிணைவும் அவசியம் - முகேஷ் அம்பானி - ஜியோமீட் - தி கரோனா வைரஸ்: உலகளாவிய தொற்றுநோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

மும்பை : கரோனா வைரஸ் பரவல் நவீன வரலாற்றை சீர்குலைக்கும் நிகழ்வாக உள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உலக அளவில் ஒத்துழைப்பும் ஒருங்கிணைவும் அவசியம் என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

covid-19-most-disruptive-event-in-modern-history-mukesh-ambani

author img

By

Published : Aug 16, 2020, 6:32 PM IST

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீட்டா அம்பானியும் இணைந்து நேற்று மும்பையில் மூன்று மருத்துவ நிபுணர்களால் உருவாக்கப்பட்ட, ”ஜியோமீட் - தி கரோனா வைரஸ் : உலகளாவிய தொற்றுநோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது” என்ற புத்தகத்தை வெளியிட்டனர்.

இந்தப் புத்தகம், மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்வப்னீல் பரிக், மருத்துவ உளவியலாளர் மகேரா தேசாய், நரம்பியல் மனநல மருத்துவர் ராஜேஷ் எம் பரிக் ஆகியோரால் எழுதப்பட்டது. இதனை, பெங்குயின் ரேண்டம் ஹவுஸினைச் சார்ந்த எபரி பிரஸ் வெளியிட்டுள்ளது.

”இந்தப் புத்தகம் தொற்றுநோய், அதனைச் சுற்றியுள்ளவற்றின் வரலாறு, பரிணாமம், உண்மைகள், கட்டுக்கதைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்கிறது. கரோனா தொற்றுநோய் சந்தேகத்திற்கு இடமின்றி நவீன வரலாற்றை மிகவும் சீர்குலைத்துள்ளது. இது ஒரு பொது சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நாடுகளும் தொற்று நோயினால் ஏற்படும் விளைவுகளை அனுபவித்து வருகின்றன.

உலக அளவில் ஏற்பட்டுள்ள தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலும், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு வலுவான ஒத்துழைப்பும் அவசியம்” என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

”தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் சமயத்தில் வெளிவந்துள்ளது, அதுமட்டுமின்றி, மக்களின் கேள்விகளுக்கான பதில்களையும் வழங்குகிறது” என நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் மூவரும் இந்தப் புத்தகத்தை பிப்ரவரி மாதத்திலேயே எழுதத் தொடங்கியதால் அவர்கள் பல கணிப்புகளை புத்தகத்தில் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.