கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை 37,336 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,218 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில், மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க மார்ச் 29ஆம் தேதி 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அதில் இடம்பெற்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற காரணத்தாலும் பணி மாற்றம் செய்யப்பட்ட காரணத்தாலும் தற்போது குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறை செயலர் அஜய் பல்லா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " பேரிடர் மேலாண்மை சட்டம், 2005இன்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு அமல்படுத்துவதற்கான குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிகளும் நிபந்தனைகளும் தொடர்ந்து அமலில் இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: கோவிட் - 19: தாய்லாந்து பிரதமருடன் மோடி ஆலோசனை