இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மம்தா, "கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதற்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவிகள், அறிவுரைகள் ஆகியவற்றை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், இந்தியா முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு (மேற்கு வங்க மாநிலம் உள்பட) மத்திய அமைச்சரவை குழுக்களை அனுப்புவது குறித்த மத்திய அரசின் திட்டம் தெளிவாக இல்லை. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
![மம்தா பானர்ஜி ட்வீட், mamata banerjee tweet, mamata banerjee,](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/mamata-twitter_2004newsroom_1587383187_832.jpg)
எனவே, இதற்கான வரைமுறைகள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பகிர வேண்டும். மத்திய அரசு விளக்கமளிக்கும் வரை இதற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கமாட்டோம்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கரோனா உயிரிழப்பு - உடல்கள் தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என வேண்டுகோள்!