ETV Bharat / bharat

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசியத் திட்டமிடல்!

கரோனா ஊரடங்கால் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் பிற மாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து விதிகளைத் தளர்த்தி புதிய வழிமுறிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புலம்பெயரும்  பிற மாநிலத் தொழிலாளர்கள்
புலம்பெயரும் பிற மாநிலத் தொழிலாளர்கள்
author img

By

Published : Apr 30, 2020, 4:47 PM IST

கரோனா சர்வதேச தொற்றுப் பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவரக் கையாளாமல் அலட்சியம் காட்டியதால் அமெரிக்கா இன்று பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டும், 55 ஆயிரம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இவ்வாறு பிற வளர்ந்த நாடுகள் போல் அல்லாமல், ஆரம்பம் முதலே அவற்றை உற்று நோக்கி வந்த இந்தியா, முன்கூட்டியே சுதாரித்து 40 நாட்கள் ஊரடங்கு அறிவித்து, 130 கோடி மக்களை வீடுகளுக்குள்ளேயே கட்டிப்போட்டது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திறம்பட கையாளப்பட்டாலும், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் பிற மாநிலத் தொழிலாளர்களின் நிலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

தங்கள் கிராமங்களையும் குடும்பங்களையும் விட்டுவிட்டு வாழ்வாதாரத்தைத் தேடி வெவ்வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வேலை இழந்து, அடிப்படை வசதிகளின்றி நடந்தே சொந்த ஊர் திரும்பும் அவலம் நிலவி வருகிறது.

ஊரடங்கு அறிவித்த முதல் சில தினங்களில், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர பேருந்துகளை இயக்கியன. தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தொழிலாளர்களை மீட்டு வருவதை ஒத்திவைத்த மாநில அரசுகள் ஊரடங்கு முடிந்ததும் அவர்களை மீட்டு வருவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.

சமீபத்தில் நந்தேடில் சிக்கித் தவிக்கும் 3,800 சீக்கிய யாத்ரீகர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூன்றரை லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கத் தயாராக இருப்பதாக தற்போது மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து பல மாநிலங்கள் தொழிலாளர்களை மீட்க முன்வரும் நிலையில், விதிகள் தளர்த்தப்பட்டு லட்சணக்கானவர்கள் பயணிக்கும்போது கரோனா தொற்றுப் பரவலுக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இந்தப் பிரச்னை தேசிய பிரச்னையாக பார்க்கப்பட்டு கையாளப்பட வேண்டும்.

ஊரடங்கினால் இந்தியா முழுவதும் நான்கு கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி சமீபத்தில் தெரிவித்துள்ளது. 2016-17ஆம் ஆண்டிற்குரிய பொருளாதார கணக்கெடுப்பின்படி, தொழிலாளர்களால் வீடுகளுக்கு அனுப்பப்படும் தொகை மட்டும் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்தாலும், கரோனாவைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் பசியால் இறப்பதே கள யதார்த்தமாக இருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்களின் அனைத்து விவரங்களையும் ஆன்லைன் மூலம் சேகரிக்க முன்மொழிந்து, பணத்தை மாற்றுவதோடு கூடுதலாக பிற சலுகைகளையும் மத்திய அரசு தற்போது உறுதி செய்துள்ளது.

மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பையும், அவர்களின் வீடுகளை நெருங்கியுள்ள தொழிற்சாலைகளில் பணியமர்த்தவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. .ஆனால் தொழிலாளர்களின் திறன் தகவல்கள் தற்போது இல்லை என்பதால் இந்த யோசனைகளை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஒடிசா அரசு, ஊர்களுக்குள் திரும்பி வர விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை ஒரு வலைதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆயத்தப் பணிகள் முடிந்ததும், அரசாங்கம் தகுந்த முடிவை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

அதேபோல் புலம்பெயர்ந்த 15 மில்லியன் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளின் மீது வரும் வாரங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இவர்களின் வாழ்வாதாரமும், அனைவரது வாழ்வும் ஆபத்தில் இருப்பதால், இந்த விஷயத்தில் ஒரு விரிவான தேசிய அளவிலான திட்டமிடல் நிச்சயம் தேவை.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு விவசாயிகளால் பெருமை: பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.