நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாட்டில் நேற்று ஒரேநாளில் மட்டும் தொற்றால் 48 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட 705 பேர் உயிரிழந்தன் மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 63ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 67 ஆயிரத்து 882ஆக உள்ளது. தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 63.92ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ஐஎம்சிஆர் தகவலின்படி, நாட்டில் ஒரு கோடியே 62 லட்சத்து 91 ஆயிரத்து 331 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 4 லட்சத்து 42 ஆயிரத்து 263 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.