ETV Bharat / bharat

ஒரே நாளில் கரோனாவுக்கு குட் பை சொன்ன 70 ஆயிரம் பேர்! - கரோனா பாதிப்பு

டெல்லி : நாட்டில் முதன்முறையாக சுமார் 70 ஆயிரம் பேர் ஒரே நாளில் கரோனா தொற்றிலிருந்தது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா
கரோனா
author img

By

Published : Sep 6, 2020, 4:20 PM IST

நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளது. சமீப காலமாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 70 ஆயிரத்தைத் தாண்டுகிறது. கரோனா தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. நேற்று (செப்.05) மட்டும் 90 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் முதன்முறையாக நேற்று 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கரோனா
இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் விகிதம்

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 5ஆம் தேதி கரோனா தொற்றிலிருந்து 70 ஆயிரத்து 72 பேர் குணமடைந்துள்ளனர்., தற்போது, ​​குணமடைவோரின் விகிதம் 77.23 சதவிகிதமாக உள்ளது. அதே போல், உயிரிழப்போரின் விழுக்காடும் கணிசமாகக் குறைந்து வருகிறது. கரோனாவிலிருது மீள்பவர்களில் ஒரு அதிவேக உயர்வு ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் 50 ஆயிரமாக இருந்த குணமடைந்வோர் எண்ணிக்கை, தற்போது 30 லட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தமாக 31 லட்சத்து ஏழாயிரத்து 223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 60 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 21 சதவீதம் பேரும், தமிழ்நாட்டில் 12.63 சதவீதம் பேரும், ஆந்திராவில் 11.91 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 8.82 சதவீதம் பேரும், உத்தரப்பிரதேசத்தில் 6.14 சதவீதம் பேரும் குணமடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.