உலகை மிரட்டும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தனது கோரமுகத்தைக் காட்டி வருகிறது. இதன் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வைரஸ் பரவலை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 909 பேர் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி 35 பேர் உயிரிழந்தனர். இதுவரை நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273ஆக உயர்ந்துள்ளது. 716 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு!