மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நேற்று புதிதாக 7,466 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,799ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம், உலகளவில் கரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது துருக்கியை முந்தி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம், நாட்டில் நேற்று ஒரேநாளில் 175 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதனால், நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4706ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில் நேற்று 3,414 பேர் கரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம், நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,106ஆக அதிகரித்துள்ளது.
அதன் அடிப்பைடியில் தற்போது நாடு முழுவதும் 89,987 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டில் கரோனாவால் மகாராஷ்டிரா மாநிலம்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 59,546 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,982 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,145 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் 16,281 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 960 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் 30 இந்திய குழுக்கள்'