ETV Bharat / bharat

கரோனா: கர்நாடகாவில் பிளாஸ்மா சிகிச்சை தொடக்கம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையை முதல்கட்டமாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தொடங்கிவைத்தார்.

Karnataka
Karnataka
author img

By

Published : Apr 25, 2020, 4:13 PM IST

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பிற்கான பிளாஸ்மா சிகிச்சைக்கான முதல்கட்ட ஒப்புதலை அம்மாநில சுகாதாரத் துறை அளித்துள்ளது. இதையடுத்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு பெங்களுரூவில் உள்ள பி.எம்.சி விக்டோரியா மருத்துவமனையில் தொடங்கிவைத்தார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின், மலேரியா, எச்ஐவி உள்ளிட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதால் நோயாளிகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இந்த பிளாஸ்மா சிகிச்சை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அனுமதியளித்துள்ளது.

  • Karnataka has taken a lead role as we initiate Phase I clinical trials to use Convalescent Plasma Therapy for severe Covid 19 infected patients. BMC Victoria hospital took the first step today. We are determined to vanquish this enemy of mankind. (1/2) pic.twitter.com/XU1BfXqGgj

    — B Sriramulu (@sriramulubjp) April 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது கர்நாடக மாநிலத்தில் இதுவரை 474 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 152 பேர் குணமடைந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 18 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிராக போராடிய இந்திய மருத்துவரை கௌரவித்த அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.