ETV Bharat / bharat

இந்தியாவில் ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43 ஆயிரத்து 893 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 508 பேர் உயிரிழந்தனர்.

COVID-19 India
COVID-19 India
author img

By

Published : Oct 28, 2020, 12:12 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 43 ஆயிரத்து 893 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 508 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதுவரை மொத்தம் 79 லட்சத்து 90 ஆயிரத்து 332 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 லட்சத்து 10 ஆயிரத்து 803 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 72 லட்சத்து 59 ஆயிரத்து 509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 10 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.28) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 786 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 10 கோடியே 54 லட்சத்து 87 ஆயிரத்து 680 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவை எதிர்கொள்வதில் இந்தியா-அமெரிக்கா தெளிவான கண்ணோட்டத்தில் உள்ளது: மைக் பாம்பியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.