உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 53 ஆயிரத்து 370 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 14 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கரோனாவால் நேற்று ஒரேநாளில் 650 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 67 ஆயிரத்து 549 பேர் நேற்று ஒரேநாளில் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து 16 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.
அக்டோபர் 23ஆம் தேதிவரை நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 13 லட்சத்து 82 ஆயிரத்து 564 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவற்றில் நேற்று மட்டும் 12 லட்சத்து 69 ஆயிரத்து 479 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.