டெல்லி: இந்தியாவில் கரோனா நோய்க் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்து லட்சத்து 38 ஆயிரத்து 716ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கையும் ஆறு லட்சத்து 53ஆயிரத்து 751ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 272ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.