மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 4,213 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஒரேநாளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், இத்தொற்றால் நேற்று 97 பேர் உயிரிழந்ததன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,206ஆக அதிகரித்துள்ளது. இத்தொற்றிலிருந்து இதுவரை 20,917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளது. கரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராதான் முதலிடத்தில் உள்ளது.
அம்மாநிலத்தில் 22,171 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 832 பேர் உயிரிழந்துள்ளனர்; 4,199 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் 8,194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,545 பேர் குணமடைந்துள்ளனர். 493 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 7,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,959 பேர் குணமடைந்த நிலையில், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்துகள் எப்படிச் செயலாற்றுகின்றன?