உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு 40 நாள்களுக்கு மேல் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாடி வருகின்றனர்.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உள்ளன. அதில் இதுவரை 12 ஆயிரத்து 726 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1568ஆக உள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12 ஆயிரத்து 974 பேரும், குஜராத்தில் ஐயாயிரத்து 248 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை மூவாயிரத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை...!