மத்திய சுகாதார அமைச்சம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் நேற்று ஒரேநாளில் 1,993 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,043ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று ஒரேநாளில் 73 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 27 பேரும், குஜராத்தில் 17 பேரும் உயிரிழந்தனர். இதன்மூலம், நாட்டில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,147ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று 564 பேர் இத்தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,889ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த் மார்ச் 25 முதல் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதியுடன் முடியவுள்ளது. இருப்பினும் நாட்டில் வைரஸ் பரவலின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு உத்தரவு மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொற்றால் மகாராஷ்டிராவில்தான் கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அம்மாநிலத்தில் இதுவரை 10,498 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 459 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலங்கள் வாரியாக இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கலாம்.
மாநிலங்கள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் | குணமடைந்தவர்கள் |
மகாராஷ்டிரா | 10,498, | 459 | 1,773 |
குஜராத் | 4,395 | 214 | 613 |
டெல்லி | 3,514 | 59 | 1,094 |
மத்தியப் பிரதேசம் | 2,660 | 137 | 482 |
ராஜஸ்தான் | 2,584 | 58 | 836 |
தமிழ்நாடு | 2,323 | 27 | 1,258 |
உத்தரப் பிரதேசம் | 2,203 | 39 | 513 |
ஆந்திரப் பிரதேசம் | 1,403 | 31 | 321 |
தெலங்கானா | 1,038 | 26 | 397 |
மேற்கு வங்கம் | 795 | 33 | 139 |
ஜம்மு காஷ்மீர் | 614 | 8 | 216 |
கர்நாடகா | 565 | 21 | 229 |
கேரளா | 497 | 4 | 383 |
பிகார் | 418 | 2 | 82 |
பஞ்சாப் | 357 | 19 | 90 |
ஹரியானா | 313 | 3 | 209 |
ஒடிசா | 142 | 1 | 39 |
ஜார்க்கண்ட் | 109 | 3 | 20 |
உத்தரகாண்ட் | 57 | 0 | 36 |
சண்டிகர் | 56 | 0 | 17 |
அசாம் | 42 | 1 | 29 |
இமாச்சலப் பிரதேசம் | 40 | 1 | 28 |
சத்தீஸ்கர் | 40 | 0 | 36 |
அந்தமான் நிக்கோபர் தீவுகள் | 33 | 0 | 16 |
லடாக் | 22 | 0 | 16 |
மேகாலயா | 12 | 1 | 0 |
புதுச்சேரி | 8 | 0 | 5 |
கோவா | 7 | 0 | 7 |
திரிபுரா | 2 | 0 | 2 |
மணிப்பூர் | 2 | 0 | 2 |
மிசோரம் | 1 | 0 | 0 |
அருணச்சால பிரதேசம் | 1 | 0 | 1 |
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து ரஷ்யா பிரதமர் குணமடைய மோடி வாழ்த்து