நாடு முழுவதும் கரோனா (கோவிட்-19) வைரஸ் தொற்றுக்கு இதுவரை நான்கு ஆயிரத்து 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 114 ஆக உள்ளது. 748 பாதிப்பாளர்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், 621 பேருடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஏப்ரல்7) காலை 9 மணிக்கு வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் கரோனா (கோவிட்19) வைரஸ் தொற்றுக்கு, 114 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 45 பேரும், குஜராத்தில் 12 பேரும், மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது பேரும், டெல்லி மற்றும் தெலங்கானாவில் ஏழு பேரும், தமிழ்நாட்டில் ஐந்து பேரும், கர்நாடகாவில் 4 பேரும், ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில், தலா 3 பேரும், கேரளத்தில் இரண்டு பேரும், பிகார், ஹரியானா, இமாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட முதல் பத்து மாநிலங்களின் பட்டியல். அவற்றின் விவரம் கீழே வருமாறு:
எண் | மாநிலங்கள் | பாதிப்பு |
01 | மகாராஷ்டிரா | 748 |
02 | தமிழ்நாடு | 621 |
03 | டெல்லி | 523 |
04 | கேரளா | 327 |
05 | தெலங்கானா | 321 |
06 | உத்தரப் பிரதேசம் | 305 |
07 | ராஜஸ்தான் | 288 |
08 | ஆந்திரா | 266 |
09 | கர்நாடகா | 151 |
10 | குஜராத் | 144 |
இந்தத் தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.