ETV Bharat / bharat

கொரோனா அச்சம்: தடை செய்த விசாக்களில் சில விதிவிலக்குகள் அமல் - டெல்லி செய்திகள்

டெல்லி: கொரோனா தொற்றுநோய் பரவாமலிருக்க அனைத்து விசாக்களையும் தடை செய்திருந்த நிலையில், இந்திய அரசு சில விதிவிலக்குகளை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைமுறைபடுத்தியுள்ளது.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்
author img

By

Published : Mar 12, 2020, 9:44 AM IST

சீனாவை ஆட்டிப் படைத்த கொரோனா தொற்றுநோய் இந்தியாவிலும் பரவி வருகிறது. ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு இந்நோய் எளிதில் வர முக்கிய காரணம் பயணங்கள். இதனைக் கணக்கில் கொண்ட இந்திய அரசு சில நாடுகளுக்கான பயணங்களுக்கு தடை விதித்தது.

இந்த தடையானது மார்ச் 13ஆம் தேதி நள்ளிரவில் இருந்து, ஏப்ரல் 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதில், அரசு தொடர்பான பயணங்கள், வேலைவாய்ப்பு, சர்வதேச அமைப்புகள் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவியுள்ள நாடுகள்
கொரோனா பரவியுள்ள நாடுகள்

இதைப் போல, உள்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கும் சில விதிமுறைகள் அளிக்கப்பட்டது. இதன்படி, சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு பயணம் மேற்கொண்டவர்கள், அங்கியிருந்து இந்தியா வந்த பயணிகள் ஆகியோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு சில அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் பயணிகளில் இந்தியர்கள் உட்பட அனைவரையும் மிக முக்கியமான பயணங்களை மட்டும் மேற்கொள்ள மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

எல்லைகளில் மேற்கொள்ளப்படும் சாலை வழி பயணங்களுக்கு சோதனைசாவடிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான விபரங்கள் தனித்தனியாக உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படும்.

இதற்கிடையே, இத்தாலியில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளது. இந்த சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மட்டும் இந்தியா வரவழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஆனாலும், அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சுமார் 15 ஆயிரம் வங்க தேசத்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது' - உள்துறை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.