ETV Bharat / bharat

கொரோனா எதிரோலி : திரையரங்குகளை மூட டெல்லி அரசு உத்தரவு

author img

By

Published : Mar 12, 2020, 11:33 PM IST

டெல்லி : கொரோனா வைரஸை பெரும் தொற்று நோய் என வரையறுத்துள்ள டெல்லி அரசு, அம்மாநிலத்தில் உள்ள திரையரங்குகள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என உத்தரவிட்டுள்ளது.

corona virus
corona virus

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக இதுவரை 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ இணையத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தச் சூழலில், வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் டெல்லியில் செயல்பட்டு வரும் திரையரங்கங்கள் மார்ச் 31ஆம் தேதி வரை மூட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "கொரோனா வைரஸ் பொரும் தொற்றுநோய் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. எனவே டெல்லியில் செயல்பட்டு வரும் திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும். ஆனால், தேர்வுகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும். பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா வைரஸை கட்டுப்படுத்த டெல்லி அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் பகுதியாக, திரையரங்கங்கள், மார்ச் 31ஆம் தேதிவரை தேர்வுகள் நடத்தாத பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளது" என்றார்.

இதனிடையே, ஐநாக்ஸ் திரையரங்கம் வெளிட்டுள்ள அறிக்கையில், "உள்ளூர், மாநில, மத்திய அரசு அலுவலர்களின் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றிவருகிறோம். இதவரை அரசிடமிருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி நடவடிக்கை எடுப்போம்" எனக் கூறியுள்ளது.

இதேபோன்று அறிக்கை வெளியிட்டுள்ள புக் மை ஷோ இணையதளம், "கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு அரசின் உத்தரவுகளை, வழிகாட்டுதல்களையும் உறுதியாகப் பின்பற்றி வருகிறோம். வாடிக்கையாளர்கள் நலனுக்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும். வாடிக்கையாளர்கள் நலமுடன் இருக்க வேண்டிக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 'தவிக்கும் வாய் அறியும் தண்ணீரின் தேவையை...'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.