திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்கு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றதால் உண்டியல் காணிக்கை, விடுதிக் கட்டணம் என பல வழிகளில் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கோயில் நடை அடைக்கப்பட்டதால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஊழியர்களுக்கு 50% மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு ரூ. 400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், வரும் மூன்று மாதங்களுக்கு முழு ஊழியத்தை 23 ஆயிரம் ஊழியர்களுக்கும் கொடுக்க முடியும் என தேவஸ்தான தலைவர் வை.வி.சுப்பா ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேவஸ்தானத்தின் ஆண்டு மொத்த செலவு 2,500 கோடி ரூபாய். ஆண்டுக்கு பணியாளர்களுக்கு மட்டுமே 1,300 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படும் எனபது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...பாபர் மசூதி இடிப்பு: லிபரான் அறிக்கையில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்கள்!