ETV Bharat / bharat

டெல்லியில் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து?

டெல்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் நடக்கவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்துசெய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

covid-19-delhi-govt-decides-to-cancel-upcoming-semester-final-exams-of-universities-under-it

author img

By

Published : Jul 11, 2020, 8:10 PM IST

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை மூட உத்தரவிட்டன. மேலும், மாணவர்களின் நலன் கருதி நாடு முழுவதும் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, இறுதியாண்டு மாணவர்கள் தவிர கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பல்கலைக்கழகங்களும் இறுதியாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு அறிவுறுத்தியது.

இந்நிலையில், டெல்லியில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழகங்களின் அனைத்துத் தேர்வுகளையும் ரத்துசெய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

கரோனா வைரஸ் காரணமாக பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் தடைபட்டுள்ளதாகவும், தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளதாகவும் கூறிய அவர், மாநில பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கவும், சில மதிப்பீட்டு முறைகளைப் பின்பற்றி பட்டங்களை வழங்கவும் அறிவுறுத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.