இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் குறைக்க மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை.
தெலங்கானாவில் தொடர்ந்து ஏழாவது நாளாக கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை கோவிட்-19 தொற்றால் தெலங்கானாவில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தெலங்கானாவில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் அதிகபட்சமாக, திங்கள்கிழமை மட்டும் புதிதாக 66 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 18 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள். இதன் மூலம் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,920ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாகப் பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இங்குள்ள காந்தி மருத்துவமனையில், தற்போது 700 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Media Bulletin on status of positive cases #COVID19 in Telangana. (Dated. 25.05.2020)#TelanganaFightsCorona #StayHome #StaySafe pic.twitter.com/Jooe4ZRXhj
— Eatala Rajender (@Eatala_Rajender) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Media Bulletin on status of positive cases #COVID19 in Telangana. (Dated. 25.05.2020)#TelanganaFightsCorona #StayHome #StaySafe pic.twitter.com/Jooe4ZRXhj
— Eatala Rajender (@Eatala_Rajender) May 25, 2020Media Bulletin on status of positive cases #COVID19 in Telangana. (Dated. 25.05.2020)#TelanganaFightsCorona #StayHome #StaySafe pic.twitter.com/Jooe4ZRXhj
— Eatala Rajender (@Eatala_Rajender) May 25, 2020
மேலும், இதுவரை வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் 28 பேருக்கும் வெளிமாநில தொழிலாளர்களில் 145 பேருக்கும் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் இதுவரை கோவிட்-19 சிகிச்சை முடிந்து 1,164 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 - மும்பையில் காவல்துறையினர் உயிரிழப்பு 12 ஆக உயர்வு!