கரோனா சூழலை பயன்படுத்தி தற்சார்பு இந்தியாவை உருவாக்குவோம் - பிரதமர் மோடி - பிரதமர் மோடி
டெல்லி: கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தை வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தக சபையின் 95ஆவது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தை குடிமக்கள் வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தற்சார்பு என்ற இலக்கை அடைய முதல்படியே ஆத்ம நிர்பார் பாரத் திட்டம். சிறு வணிகர்களை ஊக்கப்படுத்தி வளர்ப்பதன் மூலமே இந்தியாவை தற்சார்புள்ள நாடாக்கலாம். இதுவே அதற்கு சரியான தருணம்.
மருத்துவம், விமான போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் தற்சார்பாக விளங்க முடியுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சியில் இந்திய வர்த்தக சபையின் பங்கு மகத்தானது. குறிப்பாக, உற்பத்தித் துறையில் அது மிகப் பெரிய பங்காற்றியுள்ளது. 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே நாட்டின் வளர்ச்சியை அதன் பங்களிப்பு உள்ளது. கரிம வேளாண் துறையின் மிகப் பெரிய சந்தையாக வடகிழக்கு இந்தியா உருவாகும்" என்றார்.
இதையும் படிங்க: ‘தைரியமான முடிவுகளை எடுக்கும் நேரம் வந்துள்ளது’ - பிரதமர் மோடி