அமெரிக்காவைச் சேர்ந்த குளிர்பான நிறுவனங்களின் முன்னோடியாக விளங்கும் கோகோ கோலா நிறுவனமும்; இந்தியாவில் பெண்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றிவரும் இந்தியா கேர் தொண்டு நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியின் அடிப்படையில், ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், தினக்கூலி பெறும் மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள், எய்ட்ஸ் நோயில் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு ஆரோக்கிய உணவுப் பொருட்கள் தொகுப்பு, உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் தொடங்கும் இந்த நிகழ்ச்சி, அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கும் நடைபெறயிருக்கிறது. அந்த மூன்று மாதங்களுக்கு டெல்லி, பிகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் ஒன்றரை லட்சம் மக்கள் பயன்பெற உள்ளனர்.
இந்த ஊரடங்கு காலத்தில், ஏழை மக்கள் நாங்கள் அளிக்கும் நிவாராணப் பொருட்கள் மூலம் பயன்பெறுவார்கள் என்று நம்புவதாக, கேர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனோஜ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்கள் மீது வன்முறையா? குரல் கொடுக்க வருகிறது ட்விட்டர்!