ETV Bharat / bharat

துணை பாதுகாப்புப் படையினர் 20 பேருக்கு கரோனா தொற்று! - india corona updates

டெல்லி: மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரில் புதியதாக 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் துணை பாதுகாப்பு படையினர் 20 பேருக்கு கரோனா

author img

By

Published : May 26, 2020, 8:26 PM IST

டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை பாதுகாப்புப் படையினரான, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரில் புதிதாக 18 பேருக்கும்; இமாச்சலப் பிரதேசத்தில் என்டிபிசி பகுதியில் ஒருவருக்கும்; மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைமைச் செயலகம் இருக்கும் சண்டிகரில் ஒருவருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், "டெல்லி விமான நிலையத்தில் பணியிலிருந்த அலுவலர்கள் 18 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளதால், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்".

இதுவரை மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 54 பேர் டெல்லியிலும் 12 பேர் மும்பையிலும் 4 பேர் ஜார்க்கண்டிலும் கொல்கத்தாவில் மூன்று பேரும் மொத்தமாக 78 பேர் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், 132 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படையினர் விமான நிலையங்கள், கடல் துறைமுகங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இந்தியா முழுவதும் 1.62 லட்சம் பேர் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எல்லையில் பதற்றம்: லடாக்கில் முறையற்ற தாக்குதலில் ஈடுபடும் சீனப்படையினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.